மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சலவை இயந்திரம் மற்றும் தையல் மெஷின் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு சலவை இயந்திரம் மற்றும் தையல் மெஷின் வழங்கப்பட உள்ளது. இதை வாங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விண்ணப்பிக்க வருபவர்கள் 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அதன்பிறகு தையல் படித்ததற்கான உரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும், ஆண்டு வருமானம் 1 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதற்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார். இதனையடுத்து கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவை பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் விண்ணப்பிக்க வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணிக்குள் வந்து விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்