மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தையல் மெஷின் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக விண்ணப்பிக்க வருபவர்கள் 20 முதல் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இவர்கள் தையல் கலை படித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதன்பிறகு ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதற்கு சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பிக்கலாம் எனவும், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் விதவை பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆனால் ஒருமுறை தையல் மெஷின் பெற்றவர் மீண்டும் 7 ஆண்டுகள் ஆன பிறகே தகுதியுடைவரானார். மேலும் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த கூறியுள்ளார்.