சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது. இதையடுத்து கொரோனா சற்றுக் குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முன்களபணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ள குரங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூடிசஸ் கால்நடை மருத்துவ நிறுவனம் சார்பாக கொரோனா பரவிய குரங்குகளுக்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சாண்டியாகோ உயிரியல் பூங்கா நிறுவனம், குரங்குக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது அறிவியலுக்கு கிடைத்த வெற்றி என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.