Categories
தேசிய செய்திகள்

மக்களே…. தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன்…. பிரபல வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரை தொழில் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. விவசாயம் சாராத தொழில்களான உற்பத்தி, வணிகம் மற்றும் சேவைத் தொழில் ஆகியவற்றிற்கு இந்த கடன் வழங்கப்படுகின்றது. இதில் மூன்று வகை உண்டு. சிஷு கடன் (50 ஆயிரம் வரை), கிஷோர் கடன் (5 லட்சம் வரை), தருண் (10 லட்சம் வரை) என்று மூன்று வகைகளில் முத்ரா கடன் வழங்கப்பட்டு வருகிறது.

கடனுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

1. அடையாள அட்டை

2. முகவரி சான்று

3. SC/ST/OBC/சிறுபான்மையினர் சான்றிதழ்

4. நிறுவனத்தின் அடையாளச் சான்று (பதிவு சான்றிதழ் உள்ளிட்டவை)

5. கடந்த 6 மாத வங்கி அறிக்கை

6. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான பேலன்ஸ் ஷீட்

7. நடப்பு நிதியாண்டின் விற்பனை விவரங்கள்

இதுபோக கடன் விண்ணப்பத்துக்கு ஏற்ப கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படலாம். எனவே, அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையை அணுகி தகவல்களை பெறலாம்.

Categories

Tech |