இந்திய ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கைக் குழுவின் (எம்பிசி) கூட்டத்தை நவம்பர் 3ம் தேதி கூட்ட அறிவித்தது. ரெப்போ விகிதம் 190 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தபோதிலும் பணவீக்கம் உயர்ந்துக்கொண்டே தான் செல்கிறது. ஆகவே இக்கூட்டத்தில் வட்டிவிகித உயர்வு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, பிறகு வீட்டுக்கடன்கள் மற்றும் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட பிற கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரலாம். 2021-2022 நிதி ஆண்டிற்கான வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 30 முதல் நவம்பர் 7, 2022 வரை 7 நாட்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
தனியார் கடன் வழங்கும் நிறுவனமான இண்டஸ்லேண்ட் வங்கி குறைந்தபட்சம் மாதாந்திர இருப்புத்தொகையை பராமரிக்காதவர்களுக்கு வட்டியில் சில திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறது. இருப்புத்தொகை பராமரிக்காதவர்களுக்கு முன்பு 5 சதவீதம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 6% வசூலிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. நவம்பர் 1ஆம் முதல் இந்த உயர்வு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் ஓஎம்சிகள் வணிக ரீதியான LPJ சிலிண்டர்களின் விலையை நவம்பர் 1ம் தேதி முதல் குறைப்பதாக அறிவித்தது.
அதன்படி முன்னதாக 19-கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூபாய்.115.50 ஆக இருந்த நிலையில், விலை குறைப்பிற்கு பின் அதன் விலை ரூபாய்.1,744 ஆகும். ஐஆர்டிஏஐ-ன் காப்பீட்டு ஒழுங்குமுறையின் அடிப்படையில், ஆயுள் அல்லாத காப்பீட்டுக்கொள்கைகளை வாங்குவதற்கு தற்போது கேஒய்சி தேவைப்படுகிறது. ஆயுள்காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு அல்லாத உடல் நலம், வாகனக் காப்பீடு ஆகியவற்றிற்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள க்ளைம்களுக்கு கேஒய்சி தேவைப்பட்டது. இனி இது அனைவருக்குமே தேவைப்படும்.