Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே ..! நான் அடிக்கடி சொல்லுறேன்னு நினைக்காதீங்க…. தெளிவுபடுத்திய ஸ்டாலின் …!!

ஸ்டாலின் ஆகிய நான் எனக் கூறியது அகம்பாவம் அல்ல என்றும், பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான உத்திரவாதம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பது முக்கியமல்ல என்றும், அடுத்த 50 ஆண்டுக்கான திட்டமிடலை செய்ய வேண்டும் என்றும் கூறினார். அப்பொழுதுதான் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும் என்று கூறிய ஸ்டாலின் அத்தகைய ஆட்சி தான் கருணாநிதி வழங்கினார் என்றும், அத்தகைய ஆட்சியையே தானும் வழங்குவதாக கூறினார்.

மேலும் ஸ்டாலின் கூறுகையில், மு க ஸ்டாலின் ஆகிய நான் பொறுப்பேற்கிறேன் என்று தொடர்ந்து உறுதி அளித்துக் கொண்டிருக்கிறேன். உங்களில் சிலர் கருதலாம் என்ன ? இவன் நான் என்று  சொல்றானே… இந்த நான் என்பதே அகம்பாவம் தான் என நினைக்கலாம். இது ஆணவத்தால்தாலா சொல்றது கிடையாது. ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்கான உறுதிமொழிக்கான உத்தரவாதம் ஆகும் என தெரிவித்தார்.

Categories

Tech |