பாகிஸ்தானில் பைசலாபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது “பாகிஸ்தானின் வரலாறு எனக்கு தெரியும். நான் அதனால்தான் ஒரு வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதிகார பலம் மிக்க குற்றவாளிகளை நம்முடைய நீதித்துறை ஒன்றும் செய்து விட முடியாது. அதனால்தான் அதனை மக்களுக்கு விட்டு விடுகிறேன். எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் எனக்கான நீதியை இந்த நாடு பெற்று தர வேண்டும்.
நீங்கள் எனக்கு இரண்டு உறுதிமொழிகளை அளிக்க வேண்டும். எனக்கு ஏதேனும் நடந்து விட்டால் பின்னர் வீடியோவில் நான் குறிப்பிட்டுள்ள பெயரை கொண்ட நபர்களுக்கு எதிராக நீங்கள் போராடி அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும். இதனால் அதிகாரம் பலம் மிக்கவர்கள் முதன்முறையாக சட்டத்தின் முன் நிற்பார்கள்” என்று கூறியுள்ளார்.