Categories
மாநில செய்திகள்

“மக்களே நாளை ஆபத்து இருக்கு” இந்த மாவட்டங்களுக்கு…. ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!

புரேவி புயல் காரணமாக நாளை கேரளா மக்களுக்கு ஆபத்து இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள புரேவி புயலானது நாளை மறுதினம் அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு இடைப்பட்ட இந்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அந்த இரண்டு நாட்களுக்கும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயலால் நாளை கேரள மக்களுக்கு ஆபத்து இருப்பதால் அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோட்டயம் பகுதியில் புயல் காற்று சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் கேரள மீனவர்கள் யாரும் அடுத்த ஒரு வாரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் மலைப்பாங்கான பகுதிகளுக்கு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கும் போது 75-80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும், அதிக மழையும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மீட்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படை மற்றும் சிறப்பு மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |