தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நாளை வணிகர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் சார்பிலும் நாளை கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்டில் உள்ள 198 மொத்த விற்பனை கடைகளுக்கும், பழ மார்க்கெட்டில் உள்ள 130 மொத்த விற்பனை கடைகளில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பூ மார்க்கெட்டில் உள்ள மொத்தம் 430 கடைகள் மட்டுமே நாளை வழக்கம் போல் இயங்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வணிகர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு வணிக வளாகத்தில் பூ மார்க்கெட்டை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் 90% அடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பெரும்பாலான வியாபாரிகள் சங்கங்கள் நாளை வணிகர் தினம் என்பதால் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.