Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே நாளை மறுநாள்… இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது… உதவி செயற்பொறியாளர் தகவல்..!!

பெரம்பலூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

பெரம்பலூரில் நாளை மறுநாள் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பெரம்பலூர் நகர் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், சங்குப்பேட்டை, அரசு ஊழியர் குடியிருப்பு, மதனகோபாலபுரம், மூன்று ரோடு, கே.கே.நகர், 4 ரோடு, எளம்பலூர் சாலை, பாலக்கரை, உழவர் சந்தை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, வடக்குமாதவி சாலை, அரணாரை, ஆலம்பாடிரோடு, மாவட்ட அரசு மருத்துவமனை, வெங்கடேசபுரம், அண்ணாநகர், அபிராமபுரம், கே.கே.நகர், சிட்கோ தொழிற்பேட்டை, அரியலூர் மெயின்ரோடு, சமத்துவபுரம், இந்திராநகர், செங்குணம், கவுல்பாளையம், மின் நகர் மற்றும் கிராமிய பகுதிகளான மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை மறுநாள் மின் வினியோகம் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்படுகிறது. இதையடுத்து பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றவுடன் மின்வினியோகம் மீண்டும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்துச்செல்வன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |