நாளை முதல் அடுத்தடுத்து 5 தினங்களுக்கு வங்கி விடுமுறை அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணபரிவர்த்தனை தேவைகளுக்கு வங்கிகள் முக்கியமாக அவசியமான ஒன்றாக இருக்கிறது. வங்கிகள் இயங்காவிட்டால் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வங்கிகளுக்கு விடுமுறை என்றால் அதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டு விடும். இந்நிலையில் அடுத்தடுத்து ஐந்து நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை வர இருக்கிறது. நாளை மார்ச் 11 சிவராத்திரியை முன்னிட்டு வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 13 ,14 தேதிகளில் சனி, ஞாயிறுகளில் வருவதால் விடுமுறை. மேலும் 15 16 தேதிகளில், பொதுத்துறை வங்கியை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால் வங்கிகள் இயங்காது எனவும் கூறப்பட்டுள்ளது.