நாளை முதல்( டிசம்பர் 1ஆம் தேதி) கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு பணம் சார்ந்த விஷயங்களும் மாற இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம். ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாளில் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா பிரச்சினைக்கு பிறகு சிலிண்டர் விலை உயர்ந்திருப்பதால் நாளை முதல் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வீட்டுக்கடனுக்காக பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு வங்கிகள் சிறப்பு சலுகைகளை அறிவித்து இருந்தது. அந்த சலுகைள் டிசம்பர் மாதத்தில் முடிவடைகிறது. எனவே வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன் பெறுபவர்கள் சலுகைகள் இருக்கிறதா? என்பதனை தெரிந்து கொண்டு கடன் பெறலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்து வைத்திருப்பவர்கள் அந்த கார்டு மூலமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்ய இனி அதிகமாக கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். ஏனெனில் நாளை முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு செயல்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.