நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்துகளில் நின்றபடி பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் அதிகமுள்ள காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் கட்டாயம் மாஸ்க் அணிந்து பேருந்தில் பயணிக்க வேண்டும். இல்லையென்றால் பேருந்தில் பயணிக்க முடியாது.