Categories
அரசியல்

மக்களே நிராகரித்துவிட்டார்கள்…. ஏன் இப்படி புலம்புறீங்க…? அமைச்சர் பெரியகருப்பன் ஸ்பீச்…!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து அமைச்சர் பெரியகருப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 28 மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளார்கள்.

தோல்வியை ஒப்புக் கொள்ளவும் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று ஏற்றுக் கொள்ளவும் இவர்கள் இருவருக்கும் மனம் இல்லை. திமுக ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது மக்கள் வரலாறு காணாத வெற்றியை திமுகவுக்கு கொடுத்துவிட்டார்கள் என்று இருவருக்குமே எரிச்சல். ஆனால் அந்த வெற்றியானது தலைவர் மு க ஸ்டாலின் இரவு பகலாக கடந்த 5 மாதங்களாக மக்களுக்காக பணியாற்றியதற்கான நற்சான்றிதழ் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பத்தாண்டு காலத்தில் இப்போதுதான் மாநில தேர்தல் ஆணையம் நியாயமாக செய்யப்பட்டுள்ளது. காவல்துறையும் நடுநிலைமையோடு செயல்பட்டுள்ளது என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இவர்கள் இப்படி புலம்புவது ஏனோ? என்று கூறியுள்ளார்.

Categories

Tech |