பொது மக்கள் உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று தெரிவித்த காரணத்தினால், அனைவரும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக அளவு பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் தற்போது நிலைமை சீரடைந்து நிலையிலும், தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவே மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றன. இதனால் ஆன்லைன் வர்த்தகமானது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையை பிடித்துள்ள காரணத்தினால், உள்ளூர் வியாபாரிகளின் தொழில் நலிவடைந்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்க வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு வியாபாரி சங்கப் பேரவை சார்பில் பொதுமக்கள் மற்றும் கடைகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “சிறு வணிகத்தையும், சில்லரை வணிகத்தையும் இந்த ஆன்லைன் வர்த்தகம் நசுக்குவதாக குற்றம் சாட்டினார். இதை அறியாத பல வியாபாரிகள் அதனை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு வருகின்றன. இது நல்லது அல்ல. வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்த்து உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மக்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவு தெரிவித்தால் உள்ளூர் வியாபாரிகளின் தொழில் அழிந்து போகக் கூடிய சூழல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.