Categories
மாநில செய்திகள்

மக்களே…! பரிசுத்தொகுப்பில் பொருள் குறைந்தால்…? அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், ரவை, கோதுமை மாவு உள்ளிட்ட 21 வகையான பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பாக அரசு இலவசமாக வழங்குகிறது. கடந்த முறை 14 பொருட்கள் வழங்கிய போது பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு ஒரு சில பொருட்கள் கிடைக்கவில்லை. கார்டை வாங்கி பொருட்கள் கொடுத்த கையோடு ரேஷன்  கடைக்காரர்கள் பக்கத்தில் நிற்கவிடாமல் விரட்டியதால், பொருட்கள் வாங்கிய பின் வீட்டிற்கு சென்று பார்த்தால் குறைந்த பொருட்கள் மட்டுமே இருந்தது.

எனவே மீண்டும் வந்து கேட்கும்போது கடைக்காரர்கள் தர மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் 21 வகையான பொருட்கள் தருவதால் ஏதாவது ஒரு பொருட்கள் குறைத்துக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே ஏதாவது ஒரு பொருள் விடுபட்டால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  0452–253 1286  என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |