தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உட்புற சாலைகள், போக்குவரத்து சாலைகளின் பள்ளங்கள், குழிகள், மழைநீர் தேக்கம் இருந்தால் 1913 என்ற உதவி எண் மற்றும் 044-25619206, 25619207, 25619208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.மேலும் மண்டல செயற்பொறியாளர்கள் பொது மக்களுக்கு பாதுகாப்பான இடையூறு இல்லாத போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Categories