21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நவம்பர் 19ஆம் தேதி நிகழும் என்று நாசா தெரிவித்துள்ளது. இது 3 மணி நேரம் 28 நிமிடம் மற்றும் 23 வினாடிகள் நீடிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இதன்போது நிலவின் மேற்பரப்பு 97% சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். குறிப்பாக வட அமெரிக்கா பிராந்தியத்துக்கு இது தென்படும் என்றும், 2100 ஆம் ஆண்டு வரை மீண்டும் இது போன்ற நீண்ட சந்திர கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா கணித்துள்ளது.
எதிர்வரும் 8 தசாப்பதங்கள், மேலும் 179 சந்திர கிரகணங்கள் ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக, சராசரியாக வருடம் ஒன்றில் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திரகிரகணம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தெரியும் என்று நாசா கூறியுள்ளது.