Categories
தேசிய செய்திகள்

மக்களே…. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு…. உயர்நிதிமன்றம் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி நீதிபதிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என்று உத்தரவிட்டு உள்ளது. அதனை தொடர்ந்து டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபானம் விற்பதை தடை விதித்துள்ளது. பொது இடங்கள் மற்றும் பார்களில் மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 2 தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டும் பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று புதுச்சேரி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |