தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு போக்குவரத்து துறை சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்ட வருகின்றன. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பயணிகளின் குறைகளையும் அரசு நிவர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் சேலம் கோட்டை அரசு பேருந்துகளில் சேவை குறைபாடுகளை 9489203900 என்ற whatsapp எண்ணில் பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படிக்கட்டில் பயணம், பயணிகளிடம் டிக்கெட் கட்டணத்திற்கு மீதி சில்லரை வழங்காமல் இழுத்தடிக்கும் பிரச்சனை, பேருந்து நிறுத்தத்தில் நில்லாமல் செல்லுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என சேலம் மாவட்ட கோட்டை அதிகாரி தெரிவித்துள்ளார்.