Categories
மாநில செய்திகள்

மக்களே…! பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள்…. விரைவில் மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இதனால் தென் மாவட்ட ரயில்களில்பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. மேலும் காத்திருப்பவர்கள் பட்டியலும் நீண்டுள்ளது.

எனவே பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் அட்டவணை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |