Categories
தேசிய செய்திகள்

மக்களே மகிழ்ச்சி செய்தி…. இந்தியாவில் தொற்று பரவல் 13.31% குறைவு – மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு வீதங்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்நிலையில் மக்கள் கொரோனாவிலிருந்து இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும் என்றும் அதற்கும் மேலாக நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் ஒரே வழி என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாகவும் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வரும் நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர பல மாநில அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, கடுமையான கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்ததுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் 13.31% ஆக குறைந்துள்ளதாகவும், இன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |