Categories
உலக செய்திகள்

மக்களே மது குடிக்க மறக்காதீங்க…. அரசின் கோரிக்கையால் அதிர்ந்துபோன மக்கள்……!!!!!

ஜப்பான் நாட்டில் வரி வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் அதனை சரி செய்யும் நோக்கில் மக்கள் தொடர்ந்து மது அருந்த வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு வரி வருவாய் பெருக்க கையில் எடுக்கும் முதல் ஆயுதம் என்றால் அது மதுபானம் தான்.

கொரோனா நோய் பரவலுக்கு பின்பு ஜப்பானில் பொதுமக்களிடையே மது அருந்தும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக 40 முதல் 60 வயது உள்ளவர்கள் சுமார் 30 சதவீதம் பேர் தவறாமல் மது அருந்துகிறார்கள். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு நபர் 100 லிட்டர் மது அருந்தி வந்துள்ளார். அதே கடந்த 2020 ஆம் ஆண்டு 75 லிட்டராக குறைந்தது. 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் வரி வருவாயில் மூன்று சதவீதம் மது விற்பனையில் இருந்து வந்தது.

ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு 1.7 சதவீதமாக அது மாறி உள்ளது. அதனால் அரசிற்கு 100 கோடிகள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய ஜப்பானில் தேசிய பரி ஏஜென்சி sake viva ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என அரசாங்கம் சார்பாக யோசனைகள் கேட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சிறந்த யோசனைகளை வழங்கும் நபருக்கு பரிசு மற்றும் விருது வழங்கி பாராட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டி வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது

Categories

Tech |