Categories
தேசிய செய்திகள்

மக்களே..! மத்திய பட்ஜெட்ல நீங்களும் கருத்து சொல்லலாம்…! இதோ சூப்பர் வாய்ப்பு….!!!

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்படி 2023- 24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட் பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து துறை நிர்வாகிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். இதற்கு மத்தியில் ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக உயர்த்திய வட்டி விகித உயர்வு, பணவிக்க விகிதம் அதிகரிப்பு ஆகியவற்றால் பொருளாதாரத்தில் ஒரு விதமான தேக்க நிலை உருவாகக்கூடிய சூழல் மற்றும் கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் 2023- 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டுக்கு நீங்களும் ஆலோசனை கூறலாம் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அவரது ட்வீட்டில் உங்களது கருத்துக்களையும் அனுப்பி வைக்கலாம். வெளிப்படையான பொருளாதார வளர்ச்சிக்கு உங்கள் கருத்துக்கள் முழுமையாக வரவேற்கப்படுகிறது என்றார். டிசம்பர் 10ம் தேதி வரை MyGov.in எனும் பக்கத்தில் அனுப்பி வைத்துக்கொள்ளலாம். பட்ஜெட் வரும் பிப்ரவரியில் நடைபெறுகிறது.

Categories

Tech |