Categories
மாநில செய்திகள்

மக்களே…. மருத்துவமனைக்கு செல்லாதீர்…. புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மே மாதம் மத்தியில், அதாவது 10 ஆம் தேதிக்கு மேல்கொரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பெரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதனால் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மே 3ஆம் தேதி முதல் தமிழகத்தில் பகல் நேர ஊரடங்கு அமல் ஆகும் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அறிகுறி இல்லாமல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். ஒரே நேரத்தில் மொத்தமாக கூடுவதால், மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மாநகராட்சி அல்லது சுகாதார துறையை அணுகவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |