தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடும் கனமழை பெய்து வரும் நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் எங்காவது மழைநீர் தேங்கி இருந்தால் அது குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரசக்கால தேவைக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச உதவி எண்: 1913, 044 2561 9206, 044 2561 9207
044 2561 9208,