Categories
மாநில செய்திகள்

மக்களே…. மழைக் காலத்தில் இதெல்லாம் செய்யாதீங்க…. தமிழக அரசு அறிவுரை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.இந்நிலையில் பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மின் கம்பிகளில் துணிகளை காய வைக்கக் கூடாது.

மின் கம்பங்கள் மற்றும் வேலிகள் அருகில் நிற்பது அல்லது தொடுதல். மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக் கூடாது. இடி மின்னல் ஏற்படும் சமயங்களில் டிவி, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனே மெயின் ஸ்விட்சை அணைத்துவிட வேண்டும். ஐஎஸ்ஐ தரச்சான்று உள்ள மின் சாதனங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும்.கழிவறை மற்றும் குளியலறையில் ஈரமான கைகளுடன் சுவிட்சை ஆன் செய்ய கூடாது.மெயின் ஸ்விட்ச் போர்டில் மின்கசிவு தடுப்பணை பொருத்தி இருக்க வேண்டும்.அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை பார்த்தால் உடனே மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மழை நேரத்தில் வெளியே சென்று வந்த பிறகு தண்ணீரால் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு துணியால் துடைத்துவிட்டு மழைக்காலம் முடிந்தவுடன் வண்டியை சர்வீஸ் செய்ய வேண்டும். வண்டியின் பிரேக் மற்றும் டயர் ஆகியவை சரியான நிலையில் உள்ளதா என்று கவனிப்பது நல்லது. மழைக்காலங்களில் அதிவேகமாகச் செல்லக் கூடாது.வாகனத்தில் பிரேக் பிடிக்கும்போது ஒன்றன்பின் ஒன்றாக பிரேக்கை அழுத்த வேண்டும்.இருசக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோரும் கொடைகளை பயன்படுத்தாமல் ரெயின் கோட் அணிந்து கொள்ள வேண்டும்.

விளம்பரப் பலகைகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். மழைக்கால நோய்களை தவிர்க்கும் வகையில் காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கை சுத்தம், வீட்டு சுத்தம் மற்றும் கழிப்பறை சுத்தம் காக்கவேண்டும்.பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |