Categories
மாநில செய்திகள்

மக்களே…. மழை, வெள்ள குறைகளை நிவர்த்தி செய்ய…. அவசர எண்கள் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த வாரம் முழுவதும் கன மழை வெளுத்து வாங்கியது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் சிலர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய அனைத்து நிவாரண உதவிகளையும் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் மழை, வெள்ள குறைகளை நிவர்த்தி செய்ய அவசர எங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி 1913 மற்றும் 9445025820, 9445025821, 9445477205, 9445025819 ஆகிய வாட்ஸ்அப் எண்களை தொடர்பு கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்ட மக்கள் 04427666746, 04427664177, 1077, மாவட்ட உதவி மைய எண் 18005997626, 9840327626, 9444317862 ஆகிய வாட்ஸ்அப் எண்கள் மூலம் புகார்களை தெரிவிக்கலாம்.

Categories

Tech |