தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்த முழு விபரங்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். இந்த தொகையுடன் நிறுவனங்கள் கூடுதல் தொகையை செலுத்தி ஊழியர்களின் ஓய்வூதிய காலத்தில் வழங்கப்படும். இந்நிலையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வுகால முதலீட்டிற்கான வழிவகைகளை செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி ஒருவர் தன்னுடைய 21 வயது முதல் 60 வயது வரை 4,500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
அதன்படி 39 ஆண்டுகள் முதலீடு செய்தால் மொத்த தொகை 2,60,000 ரூபாய் ஆகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சராசரியாக 10 சதவீதம் வருமானம் இருக்க வேண்டும். இதனால் 2 கோடியே 59 லட்சம் கிடைக்கும். அதன்படி நீங்கள் 60 வயதை அடையும் போது மாதம் தோறும் 51,848 ரூபாய் ஓய்வூதியம் வரும். இதனால் தேசிய ஓய்வூதிய அமைப்பில் 8 முதல் 12% வரை வருமானம் கிடைக்கிறது. மேலும் 40 சதவீதம் ஆண்டு தொகையை எடுத்துக் கொண்டால் மொத்தமாக 1.56 கோடி ரூபாய் கிடைக்கும். இதற்கு வருடாந்திர தொகை 6 சதவீதம் இருக்க வேண்டும்.