நாம் மாத்திரைகளை உட்கொள்ளும் போது சில உணவுப்பொருள்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. அது என்னென்ன என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் வேலை, பணம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. அதற்கும் இயற்கையான முறையில் தீர்வு காணாமல் மருந்து மாத்திரைகள் போன்றவற்றை அதிக அளவில் உட்கொண்டு வருகின்றனர். சிறிய தலைவலிக்கு கூட மாத்திரையை தான் உபயோகிக்கின்றனர். அப்படி நாம் உட்கொள்ளும் மாத்திரைகளுடன் சில உணவு பொருட்களை சேர்த்து கொள்ளக்கூடாது.
அதாவது நாம் தண்ணீரில் மாத்திரையை சாப்பிடுவோம், அதை தவிர்த்து சிலர் டீ, காபி, பால் போன்றவற்றில் மாத்திரையை சாப்பிடுகின்றனர். அவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தான விஷயம். penicillin, tetracycline, Ciprofloxacin போன்ற ஆண்டிபயாடிக் மருந்துகள் உடன் டீ, காபி, சாப்பிட கூடாது. அது பாக்டீரியாவை ஏற்படுத்தும். அவ்வாறு நாம் சாப்பிடும் போது நமக்கு ஆஸ்துமா, மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். இதை தவிர்த்து குளிர்பானங்களை சாப்பிடவே கூடாது. ஏனெனில் அதில் இருக்கும் காபின் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி பேராபத்தை நமக்கு தரும்.