Categories
தேசிய செய்திகள்

மக்களே..! மார்ச் முதல் எதெல்லாம் மாறப்போகுது…. மொத்த லிஸ்ட் இதோ….!!!

மார்ச் மாதம்(நாளை) முதல் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள் திட்டங்கள் விலையேற்றம், இறக்கம் உள்ளிட்ட பல்வேறு விதிகள் அமலுக்கு வருகின்றது. மேலும் முந்தைய மாதம் வெளியாகும் அறிவிப்புகள் அடுத்து வரும் மாதம் முதல் அமல்படுத்தப்படும். தற்போது மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளை நாம் பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் திருத்தம் செய்யப்படுகிறது. தற்போது மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரஷ்யா உக்ரேன் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. எனவே சிலிண்டர் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வாக இருப்பதால் தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மார்ச் மாத இறுதிக்குள் ஆதார் கார்டு , பான் கார்டு இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு திட்டங்களின் கீழ் தொடர்ந்து பயன்பெற KYC  தகவல்களை வங்கி கணக்கில் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியன் வங்கி ஏடிஎம்களில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுக்கள் வராது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2000 ரூபாய் நோட்டுகளை இந்தியன் வங்கி கிளைகளில் நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம். மேலும் டோல் பிளாசாவில் ஃபாஸ்டேக் வாங்குவதற்காக மார்ச் 1ம் தேதி முதல் 100 ரூபாய் செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |