Categories
உலக செய்திகள்

மக்களே…! மார்ச் 1 முதல்தளர்வுகள் – அரசு அதிரடி அறிவிப்பு …!!

சுவிட்சர்லாந்தில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் கடைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் விலங்கியல் பூங்காக்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில்  அத்தியாவசியம்  இல்லாத இடங்கள் என்ற பிரிவின்படி கடைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவை மார்ச் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.  மேலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விலங்கியல் பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு சுவிஸ் அரசு அனுமதி அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. வெளியிடங்களில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு 15 பேர் வரை பங்கேற்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

அடுத்த கட்டமாக மார்ச் 22ஆம் தேதி உணவகங்களில் வெளியே அமர்ந்து சாப்பிடுவது வீட்டிலிருந்து வேலை பார்ப்பதில் மாற்றங்கள் போன்ற சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக ஸ்விஸ்  அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |