கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்தந்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் முக கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.