தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஒரு சில பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலை 8 மணி முதல் 10 மணி வரை மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை யாரும் நிற்கவோ உட்காரவோ அனுமதி இல்லை. வளாகத்தில் குப்பை போடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுவாயிலில் செக்யூரிட்டிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.