கனடா 2022-2024-ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டத்தை பிப்ரவரி மாதம் 11-ம் தேதி அறிவிக்க உள்ளது. அதாவது கனடா 2021-ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் புலம்பெயர்தல் மட்ட திட்டத்தை அறிவிக்கிறது. இந்த அறிவிப்பில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அறிவிப்பு, இந்த ஆண்டில் கனடாவுக்கான புலம்பெயர்தல் இலக்கு, மனித நேய மற்றும் குடும்ப புலம்பெயர்தல், பொருளாதாரம் ஆகிய திட்டங்களின் கீழ் கனடாவுக்கு புதிதாக எத்தனை பேர் வரவேற்கப்பட உள்ளார்கள் ? என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இந்த ஆண்டில் ( 2022-ல் ) கனடா புதிதாக 411,000 புலம்பெயர்வோரை வரவேற்க உள்ளது. மேலும் புலம்பெயர்வோர் மட்ட திட்டத்தின் கீழ் குடும்ப பிரிவு புலம்பெயர்வோர் 103,500 பேரும், பொருளாதார வகுப்பு புலம்பெயர்வோர் 241,500 பேரும் கனடாவுக்கு வரவேற்கப்பட உள்ளனர். அதேபோல் மனிதநேயம் அடிப்படையில் 66,000 வரவேற்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.