இங்கிலாந்தில் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டிலுள்ள ஒருவருக்கு பறவைக்காய்ச்சல் உறுதி செய்யபட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிக வேகமாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது. அதன்படி இங்கிலாந்திற்கும் பரவிய ஓமிக்ரான் அந்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் இங்கிலாந்திலுள்ள தென்மேற்கு பகுதியில் ஒருவருக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது குடியிருப்புக்கு அருகே பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உயிரினங்கள் இருந்ததாக இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தொற்று ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது என்றபோதிலும் பொதுமக்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உயிரினங்களை நேரடியாக தொடக்கூடாது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மேல் குறிப்பிட்ட நபருக்கு H5N1 என்ற வைரஸ் உறுதி செய்யப்பட்டால் அந்நாட்டிலேயே இவர்தான் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.