Categories
மாநில செய்திகள்

மக்களே! முகக்கவசம் எளிமையான வழிமுறை அல்ல…. வலிமையான வழிமுறை…!!!!

தமிழகத்தில் ஓமைக்ரான் பரவலுக்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 294 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

முகக்கவசம் எளிமையான வழிமுறை அல்ல, வலிமையான வழிமுறை. கொரோனா தொற்று எண்ணிக்கையில் ஏற்றம் வரும், அதற்கு பதட்டப்பட வேண்டாம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |