மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 99 வது பிறந்தநாள்விழா கடந்த ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. அந்த நாளில் முதல்வர் பல்வேறு உதவிகளையும் கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
இந்த நிலையில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணாநகரில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு 9999 மரக்கன்றுகளை நடும் நிகழ்வை இன்று தொடங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் கலைஞர் பிறந்த நாளில் மரக்கன்றுகளை நட்டு அதை முறையாக பராமரித்து வரும் குழுவை நாங்கள் தேர்வு செய்வோம் தேர்வு செய்யப்படும் அந்த குழுவுக்கு அடுத்த ஆண்டு இதே நாளில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.