தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்துள்ள நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் பிப்.. 16- மார்ச் 6 வரையிலும் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்.. 16- மார்ச் 6 வரை புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் சென்னை நந்தனத்தில் பிப்ரவரி 16 முதல் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு அனுமதி கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படும் என்று பபாசி செயலாளர் முருகன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை புத்தகக் கண் காட்சிக்கான டிக்கெட்டை பபாசி (bapasi.com) இணையதளத்தில் இன்று(பிப்…6) முதல் பெற்றுக் கொள்ளலாம். காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும். புத்தகக் காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடைய 10 லட்சம் இலவச அனுமதி சீட்டுகள் தர திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.