சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியாவில் அமேசான் தளத்தில் அறிமுகமாகிறது. கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர் கொண்டிருக்கிறது. இது 13 5ஜி பேண்ட்களுக்கான வசதியை வழங்குகிறது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ32 5ஜி மாடல் போன்றே காட்சியளிக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.25,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி.+ இன்பினிட்டி வி எல்.சி.டி. ஸ்கிரீன்
– ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர்
– மாலி-G57 MC3 GPU
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
– 6 ஜிபி ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ.
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. பிளாஷ்
– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
– 13 எம்பி செல்பி கேமரா, f/2.2
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்