நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் கோட்டா இன்று வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ரூ.300தரிசன டிக்கெட்டை இன்று காலை 9 மணிமுதல் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதள முகவரியில் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.