மத்திய தொழிற்சங்கங்கள் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது.தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்வதால் பொது போக்குவரத்து பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதால் பஸ்கள் முழுமையாக இயக்க முடியாத நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்கிடையில் இதனை முன்னிட்டு மார்ச்28,29 அந்த இரண்டு நாட்களும் தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போராட்டத்தில் காங்கிரஸ் திமுக இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. பெரும்பாலும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் போக்குவரத்து வங்கி உட்பட முக்கிய சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது.