சென்னையில் முதல் முறையாக மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஜூன் மூன்றாம் தேதி முதல் 5ஆம் தேதி வரை கலைவாணர் அரங்கில் இந்த கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஊட்டி, ஓசூர், திண்டுக்கல்,பெங்களூர் மற்றும் பூமி ஆகிய பகுதிகளில் இருந்து 200 வகையான மலர்கள் கொண்டு வர உள்ளன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து ஜூன் மூன்றாம் தேதி கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளதால் இந்த மலர் கண்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.