தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு, இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு தினம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். புதிய வகை கொரோனா வைரஸ் அதிகம் பரவும் தன்மை கொண்டதால் அதிலிருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் மக்கள் இதனை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.