உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. ராமர் கோயிலை கட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்றுகோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ராமர் கோவில் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வரும் 2023-ஆம் ஆண்டு ராமர் கோவில் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Categories