Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் இங்க எல்லாம் வெள்ளம் வரலாம்…. மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை உயர்த்தினாலும்  பாதிப்பும் ஏற்படாது என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி மொத்த ஏரியின் கொள்ளளவு தற்போது 2862/3645 மில்லியன் கன அயாக உள்ளது. இதனால் ஏரியில் இருந்து 5  மதகு கொண்ட 2  மற்றும் 3-வது ஷட்டரில்  இருந்து 100  கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது 500 கன அடியாக நீர்வளத்துறை அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். மேலும் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாய், அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடாமல் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும்  நீரின் அளவை 50 கனஅடியாக உயர்த்தி உள்ளதாகவும், 24 மணி நேரமும் செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணித்து வருவதாகவும், கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதாலும் அடையாறு ஆற்றை தூர்வாரி கரையை பலப்படுத்தி 10 மீட்டர் அளவுக்கு அடையாறு ஆற்றை அகலப்படுத்தி உள்ளதால் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை உயர்த்தினால் கூட பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |