Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகம் முழுவதும் நாளை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை 600 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 160 நகர்புற சுகாதார மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |