தமிழக ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் ஏழை, எளிய மக்களுக்கு சத்துள்ள பொருட்கள் கிடைக்கும் வகையில் ராகி, கம்பு, தினை, குதிரை வாலி, சாமை, வரகு போன்ற சிறு தானியங்களும் ரேஷன் கடைகளில் விற்கப்படள்ளன. இந்த திட்டம் முதல் கட்டமாக சென்னை, கோவையில் உள்ள ரேஷன் கடைகளில் விரைவில் செயல்படுத்த அரசு அனுமதித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரி தெரிவித்ததாவது, சிறு தானிய வகையை வேளாண்துறை கொள்முதல் செய்து சப்ளை செய்யும்.
தற்போது கொள்முதல் செலவு, போக்குவரத்து ஆகியவற்றை கணக்கிட்டு சிறு தானியங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் பணி நடக்கிறது. ஆகவே இரு வாரங்களில் ரேஷன் கடைகளில் அவற்றின் விற்பனையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை, கோவை ஆகிய பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளை நடத்தி வரும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடை ஒன்றுக்கு எவ்வளவு?.. சிறுதானியங்கள் தேவை எனும் பட்டியலை நாளை (பிப்..28)க்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக கடை ஒன்றுக்கு சிறுதானிய வகை தலா 5 கிலோ அனுப்பப்படும். அதன்பின் விற்பனையை பொருத்து கூடுதலாக அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.