உலகிலுள்ள பெரும் நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையில் ஊபர் ஏர், ஏர்பஸ், ஹுண்டாய், போயிங் ஆகிய நிறுவனங்கள் முன்பே சோதனை அளவில் பறக்கும் கார்களை தயாரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தற்போது ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான சுஸூகி, ஸ்கைடிரைவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் மின்சார கார்களை தயாரித்து இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
அதாவது 2 பேர் அமரும் அடிப்படையில் பறக்கும் மின்சார கார்களை அதிகமான அளவில் உற்பத்தி செய்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருநிறுவனங்களும் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வருகிற 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கண்காட்சியில் பறக்கும் டாக்சிகளையும் ஸ்கைடிரைவ் நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ளது.