பிரித்தானியாவில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதனால் செல்போன், காப்பீட்டு நிறுவனங்கள், அவசர தேவைக்கு பணம் என பையுடன் வெளியேற தயாராக வேண்டும் என மூன்று மில்லியன் குடும்பங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. மேலும் பிரித்தானிய மக்கள் வெப்ப அலைகளால் கடும் அவதிக்குள்ளாக இருந்த நிலையில் நேற்று மின்னலுடன் பெருமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்த சூழலில் வாகன நெரிசல் மற்றும் மின்சாரம் துண்டிப்பு உட்பட நெருக்கடிகளுக்கு மக்கள் உள்ளாக கூடும் எனவும் ஆபத்தான பெருவெள்ளம் ஏற்பட போவதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் அவசரமாக வெளியேறும் விதமாக தயாராக இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். நேற்றும் இன்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே கார்ன்வாலில் நேற்று வாகன ஓட்டிகள் வெள்ளம் சூழ்ந்த சாலைகள் வழியாக போராடினர். அதே சமயம் வடமேற்கில் இரண்டு அங்குலம் மழை பெய்யக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் ரிச்மண்ட் சிஸ்விக் மற்றும் புட்ணி உள்ளிட்ட தேம்ஸ் அருகே மேற்கு லண்டனின் பகுதிகளும் வெள்ள எச்சரிக்கை அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.